வாகமண் சுற்றுலாதளத்தில் மூன்று கோடி மதிப்பில் மிக பெரிய கான்டிலிவர் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது வாகமண் சுற்றுலாதளம் இங்குள்ள இயற்கை அழகை ரசிப்பதற்க்காகவே இந்தியா உட்பட வெளிநாடுகளிலிருந்து லட்சகணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்வது வழக்கமாகும்.
மேலும் மலையாளம் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இங்கு சினிமாக்கள் சூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வாகமண்ணில் உள்ள மொட்டகுந்து வீயூ - பாண்ட் இடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இவ்விடத்தின் இயற்கை அழகை ரசித்து செல்வார்கள். இந்நிலையில் இடுக்கி மாவட்ட சுற்றுலாத்துறையும் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றும் இணைந்து மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கான்டி லிவர் என்ற புதிய கண்ணாடி பாலம் ஒன்றை அமைத்துள்ளனர்.
120 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனிடையே இதுப்போன்று கண்ணாடி பாலம் பீகார் மாநிலத்தில் 80- அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.
வெளிநாடுகளில் மட்டுமே அதிகளவு காணப்படும் இதுப்போன்ற கண்ணாடி பாலம். இப்பொழுது இந்தியாவில் அதிக நீளம் கொண்ட பாலமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமாணில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாபயணிகள் கண்ணாடி பாலத்தின் மீது நடந்து சென்று இயற்கை அழகை ரசிப்பதற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வேளச்சேரி இரயில்கள் கடற்கரைக்கு செல்லாது!