இந்தியாவிலேயே தமிழகம் தான் சுற்றுலா துறையில் முதல் இடத்தில் உள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா துறை அலுவலகத்தில் சுற்றுலா பயண பேருந்துகள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா தங்கு விடுதிகளில் அறைகள் பதிவு செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட முன்பதிவு மையத்தை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறை தற்போது வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே சுற்றுலா துறையில் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது என்றார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் 28 ஹோட்டல்கள் தமிழ்நாடு முழுவதும் இருப்பதாகவும் அதில் 473 குளிரூட்டப்பட்ட அறைகளும், 199 சாதாரண அறைகளும்,172 அறைகள் மலை பகுதிகளில் என மொத்தம் 845 அறைகள் இருப்பதாக குறிப்பிட்டார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதிகளில் முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான கட்டன சலுகைகளும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
ஊட்டி முதல் கோவா மந்த்ராலயா என பல்வேறு இடங்களுக்கு ஒரு நாள் தொடங்கி 14 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும், 2022-23 ஒரு வருட காலத்தில் மொத்தம் 95,469 சுற்றுலாப் பயணிகள் மேற்கொண்டுள்ளதாகவும், 83,897 நபர்கள் திருப்பதி மற்றும் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதத்தில் 40,248 நபர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், மேலும் சுற்றுலா பயணங்களில் வசதிக்காக சுற்றுலா தளங்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதிகள் படகு கூழாங்கல் மற்றும் பல்வேறு சுற்றுலாக்கள் குறித்த தகவல்கள் முன்பதிவு ஆகியவற்றை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கவும் சுற்றுலாவின் போது ஏற்படும் குறைகளை அடைய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் உதவி மையமும் கட்டுப்பாட்டு அறையும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க:திருவண்ணாமலை: தீப மலையில் திடீர் தீ; கண்டுகொள்ளாத வனத்துறை; களமிறங்கிய சமூக ஆர்வலர்கள்!