பொழுதுபோக்கு

கவர்ச்சி காட்டினால் படவாய்ப்பு கிடைக்குமோ? நெட்டிசன்களின் ஆபாச ட்ரோலுக்கு கொந்தளித்த சமந்தா..

பச்சை நிற கவர்ச்சி ஆடைக்கு குவிந்த ஆபாச ட்ரோல்களை பார்த்து கடுப்பான நடிகை சமந்தா தக்க பதிலடியை கொடுக்க, அதற்கு நெட்டிசன்களும் எதிர் கேள்வி எழுப்பி வருவது இணையத்தியே சூடேற்றி வருகிறது.

Tamil Selvi Selvakumar

ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு படு கவர்ச்சியான மரகத பச்சை நிற கவுன் அணிந்து சமீபத்தில் சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் மின்னல் வேகத்தில் டிரெண்டாகின. சமந்தாவின் இந்த புதிய லுக் ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம். அவரது உடையை பார்த்து ரசிகர்கள் ஒருபக்கம் வர்ணித்து தள்ள, மற்றொரு புறம் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் குவிந்து வருகிறது.

நடிகை சமந்தா கவர்ச்சி பொங்க உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்த நிலையில், அவரது உடை டேஸ்ட்டையும் சமந்தாவையும் பற்றி ஏகப்பட்ட ஆபாச கமெண்ட்டுகளும் ட்ரோல் மீம்களும் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், உடனடியாக நடிகை சமந்தா அந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு போஸ்ட்டை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதில் பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும். பெண்களின் ஆடையை வைத்து அவர்களை தீர்மானிப்பது, அவர்களின் இனம், படிப்பு, சமூக அந்தஸ்த்து, நிறம் என ஒரு பெரிய லிஸ்ட்டே நீண்டு கொண்டிருக்கிறது.  நாம் 2022ல் இருக்கிறோம். இன்னமும், பெண்களை அவர்கள் அணியும் உடையை வைத்து இப்படி ஜட்ஜ் பண்ணுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களது ஆடை பற்றி யாருமே பேசக் கூடாது என்றும் சமந்தா கூறியுள்ளார். பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு சுய முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

இவர் போட்டிருக்கும் ஸ்டோரிக்கு பதிலளிக்கும் வகையில், ஆபாச வார்த்தைகள் அடங்கிய டி சர்ட்டை அணிந்து கொண்டு பெண்கள் வெளியே சுற்றுவது சரிதானா? என்று நெட்டிசன்கள் எதிர் கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும், உங்கள் விவாகரத்துக்கு பிறகு, கவர்ச்சி குத்தாட்ட பாடல்களிலும், சரக்கு விளம்பரங்களிலும் இப்படி தாராளமாக நடித்து வருவது ஏன்? என்றும், அதே 2022ல் நடிகைகள் இப்படி கிளாமர் உடைகளை அணிந்து போஸ் கொடுத்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என ஏன் கருதுகின்றனர்? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.