பொழுதுபோக்கு

வெறும் 9 நாள்..இத்தனை கோடி வசூல்! நாளுக்கு நாள் எகிறும் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தின் வசூல்...!!300 கோடி தாண்டுமா?

நாளுக்கு நாள் வசூலை வாரிகுவித்து வரும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் நேற்று மட்டும் 25 கோடி வசூலை பெற்றுள்ளது.

Tamil Selvi Selvakumar

காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அப்போது இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அப்போது நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்களை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி என்பவர் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இந்த திரைப்படத்திற்கு வரிச்சலுகை வழங்கியுள்ளது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியான இந்த திரைப்படம் வெளியாகிய முதல் 6 நாட்களிலே இந்தியாவில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூல் சாதனையை படைத்தது. அதற்கு பிறகு பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்ற இப்படம் 9-வது நாளான நேற்று மட்டும் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இதன் மூலம் வெளியாகிய 9 நாட்களில் இந்த திரைப்படம் ரூ.145 கோடி வசூலித்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் வார இறுதி நாளான இன்று இதன் வசூல் சாதனை ரூ.170 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் இப்படத்தின் வசூல் உலகெங்கிலும் சேர்த்து ரூ. 300 கோடி வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.