பிரபல இந்தி நடிகையான சுஷ்மிதா சென், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான பகுதி குறித்தும், தனது வாழ்க்கை கொடுத்த மற்றொரு வாய்ப்பை எவ்வாறு உபயோகப்படுத்துவது குறித்தும் மனம் திறந்துள்ளார்.
பிரபல இந்தி நடிகையான சுஷ்மிதா சென், தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பிறகு இந்திப் படங்களில் நடித்து வரும் அவர், இப்போது பிரபல திருநங்கை செயற்பாட்டாளர் ஸ்ரீகவுரி சாவந்த் வாழ்க்கைக் கதையில் நடிக்கிறார். மும்பையைச் சேர்ந்த ஸ்ரீகவுரி சாவந்த், திருநங்கைகளுக்காகக் குரல் கொடுத்து, அவர்களின் உரிமைகளுக்காக, பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளார். அவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் தாலி (Taali) வெப் தொடரில் சுஷ்மிதா சென் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சுஷ்மிதா சென் தனது வாழ்க்கையின் கடினமான கட்டத்தை பற்றி மனம் திறந்துள்ளார். அதாவது, கடந்த மார்ச் மாதம், டிஸ்னியின் ஆர்யா வெப் தொடரில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது, சுஷ்மிதா சென்னிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், இது குறித்து, தனது ரசிகர்களுக்கு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதற்காக ஆஞ்சியோ சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தற்போது சுஷ்மிதா சென் அளித்த பேட்டியில், " அந்த நாட்கள், எனது வாழ்க்கையின் ஒரு கடினமான பகுதி. ஆனால், அதை கடந்து வந்துவிட்டேன். அந்த கட்டத்தில் இருந்து, தற்பொழுது வாழ்க்கையின் மறுபக்கத்திற்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். இப்பொழுது எனக்கு அதை நினைத்து பயமில்லை. அதற்கு பதிலாக, இன்னொரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக எண்ணி, இந்த வாழ்க்கையில் மதிப்புடனும் கவனத்துடனும் செயல்பட உள்ளேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும், எப்பொழுதும் நமது ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என, தனது ரசிகர்களுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்.
இதையும் படிக்க || ஸ்டூவர்ட் பிராட்டின் ஓய்வை, தாங்க முடியாமல் அழுத ஆண்டர்சன்... பிரிகிறது சாதனை ஜோடி!!