பொழுதுபோக்கு

உதவி வேண்டி வீடியோ வெளியிட்ட பிதாமகன் தயாரிப்பாளர்...!!

Malaimurasu Seithigal TV

சர்க்கரை வியாதி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் துரை மருத்துவ உதவி வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் பிதாமகன், கஜேந்திரா போன்ற பல படங்களை தயாரித்தவர் வி ஏ துரை.  EVERGREEN MOVIES என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி என்னம்மா கண்ணு, லூட்டி, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.  கடந்த சில வருடங்களாக சர்க்கரை வியாதி காரணமாக தயாரிப்பாளர் துரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற கூட காசு இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக அவரது வீடியோ வெளியாகி உள்ளது.  சர்க்கரை வியாதி காரணமாக அவரது காலில் உள்ள எலும்பு வெளியே தெரியும் அளவுக்கு கடுமையாக அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரது உடல் மிகவும் மெலிந்து இருப்பதாகவும் அவருக்கு உதவி தேவை எனவும் அவர் அந்த வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார்.