விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2 திரைப்படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. அது தொடர்பாக Pre Release Event சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், பாரதிராஜா, பாக்யராஜ், இயக்குனர் சசி, மோகன் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் இடையில் அயோத்தி பட இயக்குநர் மந்திரமூர்த்தி, டாடா பட இயக்குநர் கணேஷ் கே.பாபு, யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் ஆகியோர் பிச்சைக்காரன்-2 படக்குழுவால் விழா மேடையில் கவுரவிக்கப்பட்டனர்.
முன்னதாக, விழாவில் விஜய் ஆண்டனியின் மனைவி மேடையில் கண் கலங்கி கொண்டே மலேசியா விபத்து குறித்து பேசுகையில், அங்கு நடந்த விபத்து சமயத்தில் விஜய் அந்தோணியின் உதவியாளர் கண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "சாருக்கு விபத்து ஏற்பட்டது. தண்ணீரில் மூழ்கி விட்டார் ", என்று தெரிவித்தவுடன் தனக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்தபோது, சில பத்திரிக்கையாளர்கள் தனக்கு நபீக்கை அளித்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவர் கடவுள் சார்ந்து இருப்பதில்லை ஆனால் எல்லா நல்ல விஷயங்களையும் செய்வார். அவருக்கு பின்னால் இருப்பது மகிழ்ச்சி. அவரை திருமணம் செய்தது மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் நன்றி", என தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
பின்னர், விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில்,
இந்த பிச்சைக்காரன் திரைப்படம் இயக்குனர் சசி தனக்கு போட்ட பிச்சை தான் என்றும், முதலில் தனக்கு இந்த திரைப்படத்தை இயக்க விருப்பம் இல்லை எனவும், பின்னர் இயக்குனர் தன்னை ஊக்கப்படுத்தி அதன்பின் தானும் இந்த படம் மூலம் இயக்கத்தைக் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிச்சைக்காரன் முதல் பாகத்தில் சசி என்ன செய்தாரோ அதே எமோஷனலை காபி செய்து வைத்தது தான் பிச்சைக்காரன்-2 படம் அமைந்தது எனவும் குறிப்பிட்டார். பின்னர் இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாரதிராஜா திரைப்படத்தின் சுவாரஸ்யங்கள் குறித்து பேசினர்.
இதையும் படிக்க } "காவல் துறை அதிகாரிகளை மாற்றி எந்த பயனும் இல்லை; அமைச்சரை மாற்றுக” - அன்புமணி ராமதாஸ்.