கொன்றால் பாவம் திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி, ஒளிப்பதிவாளர் செழியன், செண்ட்ராயன், இயக்குனர் தயாள் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஒளிப்பதிவாளர் செழியன்:
விமர்சனம் செய்பவர்கள் மீது பல விமர்சனங்கள் வந்தாலும் நல்ல திரைப்படத்தை அவர்கள் பாராட்ட தவறுவதில்லை. அந்த அளவுக்கு நடிப்பு முதல் கேமரா வொர்க் வரை தனித்தனியாக பார்த்து பாராட்டுகின்றனர். எனது ஒளிப்பதிவு குறித்து தனியாக பாராட்டிய அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன்.
சந்தோஷ் பிரதாப்:
இப்படம் உங்களின் விமர்சனத்தால் வெற்றி பெற்றுள்ளது. இயக்குனருக்கு நன்றி. வளர்ந்து வரும் நடிகருக்கு இதுபோன்ற படங்கள் அமைவது மகிழ்ச்சியானது. இப்படத்தில் அனைத்துமே முழுமையாக அமைந்தது. முழு உழைப்பை கொடுத்துள்ளனர். திடீரென தோல்வி வரும்போது நமக்கு ஒரு குழப்பம் வரும். இதுபோன்ற படங்கள்தான் நம்பிக்கை கொடுக்கும். எனது அடுத்த படத்தில் நான் என்ன பண்ண வேண்டும் என்பதை இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் இடம் இருந்து கற்றுக் கொண்டேன். கொன்றால் பாவம் எனக்கு நிச்சயம் மறக்க முடியாத படம் என சந்தோஷ் பிரதாப் பேசியுள்ளார்.
வரலட்சுமி சரத்குமார்:
முதலில் நான் விமர்சகர்கள் மீது கோபத்தில் இருந்தேன். இப்படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு பார்த்து மாறிவிட்டேன். தமிழ் சினிமாவில் மிஸ் பண்ணுகிறோம் என்று சொன்னார்கள். இது எனக்கு உந்துதலாக இருந்தது யாரும் என்னை மறக்க வில்லை என்று மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படமும் எனது நடிப்பும் பாராட்டப்பட்டது என வரலட்சு கூறியுள்ளார்.
சார்லி:
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சொல்லாமல் இருந்த அனைவருக்கும் நன்றி. ஆஸ்கார் விருது பெற்ற இசை அமைப்பாளர் கீரவாணி விருதை இந்தியாவுக்கு சமர்ப்பிப்பதாக சொன்னார். அவருக்கு போனில் மெசேஜ் மூலம் நன்றி சொன்னேன். அடுத்த சில மணி நேரத்திலேயே நன்றி சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினார். இது நட்சத்திரங்கள் சேர்ந்த சினிமா அல்ல. உழைப்பு மட்டுமே என பேசியுள்ளார் சார்லி.