பொழுதுபோக்கு

பாதிலேயே நிறுத்தப்பட்ட நெல்சன் - சிம்பு கூட்டணி படம் இதுவா..? இப்போ..மீண்டும் தொடங்குகிறதா?

இயக்குனர் நெல்சன் மற்றும் நடிகர் சிம்பு இயக்கத்தில் உருவாகி பாதிலேயே நிறுத்தப்பட்ட திரைப்படத்தை மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Selvi Selvakumar

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன், நடிகர் சிம்பு கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு   ’வேட்டை மன்னன்’ என்ற திரைப்படம் உருவாகி வந்தது. ஆனால் திடீரென அந்த படம் எந்தவித காரணமும் கூறப்படாமல் நிறுத்தப்பட்டது. 

அதன் பின்னர்தான் நெல்சன், ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதனை அடுத்து ’டாக்டர்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி முடித்துவிட்டு, தற்போது தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார். 

அடுத்ததாக இயக்குனர் நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ என்ற படத்தை இயக்க உள்ளார். 

இந்நிலையில் நெல்சன் - சிம்பு கூட்டணியில் உருவாகி பாதிலேயே நிறுத்தப்பட்ட ‘வேட்டை மன்னன்’ படத்தை மீண்டும் நெல்சன் தொடங்க இருப்பதாகவும் இதற்கு சிம்புவும் ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நெல்சன் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கயுள்ளதால், அனேகமாக அந்தப்படத்தை முடித்துவிட்டு தான் சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தை இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நெல்சன் ’வேட்டை மன்னன்’ படத்தையும் சிம்பு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிம்பு ரசிகர்களுக்கு மாநாடுக்கு பிறகு மீண்டும் ஒரு விருந்து காத்திருப்பதாக தகவல் கூறுகிறது.