தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பொங்கல் பாண்டிகையன்று வெளியாகியிருக்க வேண்டிய வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே மீண்டும் அதே கூட்டணியில் அஜித்-எச்.வினோத்-போனி கபூர் இணைந்து Ak61 திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் இணைந்து நடித்த அஜித் - தபு ஜோடி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது.
தற்போது அந்த ஜோடி சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிப்பது Ak61 திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.