பொழுதுபோக்கு

"வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு வில்லியாக நடிப்பேன்" - வரலட்சுமி சரத்குமார்.

Malaimurasu Seithigal TV

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி, ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடிக்கும் 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்'   திரைப்படம் வரும் 19-ம் தேதி ஆஹா ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. அதன் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. 

அந்த விழாவில் மேடையில் பேசுகையில்  நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது,..  

" இந்த படத்தில் கண்டிப்பாக கதைக்கரு  இருக்கும் எனவும், கதை கேட்கும் போதே சுவாரசியமாக இருந்தாகவும், கூறினார். ஆரவ் உடன் தான் நடித்திருக்கும் இந்த படம், விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்தார். மேலும்,  மற்ற படங்களில் இருப்பது போல இந்த படத்தில், சர்ச்சை எதுவும் இல்லை எனவும்,  ஆனால் இந்த  படத்தில் நல்ல கதை இருக்கிறது என்றும் கூறினார். 

பின்னர் கதாபாத்திர தேர்வு குறித்து  செய்தியாளர் கேட்ட கேள்விக்கு,..

" நான் ஒரு நடிகை. எந்த மாதிரி கதாப்பாத்திரமாக இருந்தாலும்  நடிப்பேன். வில்லியாக, கேரக்டர் ரோல் என ஏதுவாக இருந்தாலும் என்னால் அந்த கதாப்பாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்க முடியும் என்றால் கண்டிப்பாக நடிப்பேன். அதோடு, வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கும் வில்லியாக நடிப்பேன் என்று கூறினார். 

நடிகர் ஆரவ் மேடையில் பேசுகையில்,...

" கலகத்தலைவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தேன். இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். இயக்குநர் இந்த படத்தை 25 நாட்களில் முடிப்போம் என்றார்; ஆனால் 21 நாட்களிலேயே முடித்தார். மிக சர்ப்ரைஸாக இருந்தது", என்றும் கூறினார்.

அதோடு, படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக முக்கியம். ஒரு கதை கூறி அதே மாதிரி எடுப்பது பெரிய விசயம். ஆனால் இயக்குநர் கதை கூறி அதை விட பயங்கரமாக எடுத்துள்ளார்", பாராட்டினார்.