பொழுதுபோக்கு

ஆதிபுருஷை விட இது எவ்வளவோ மேல்... “ஹனுமான்” பட டீசருக்கு குவியும் பாராட்டுகள்...

Malaimurasu Seithigal TV

தெலுங்கு சினிமாவில் இயக்குனர்  பிரசாந்த் வர்மாவால் இயக்கப்பட்டு  தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடித்துள்ள "ஹனு-மேன்" என்ற திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அப்படத்தின்  டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டு பெற்றுள்ளது.

தெலுங்கு சினிமாவில்  "ஹனு-மேன்" என்கிற படம் பிரசாந்த் வர்மாவால் எழுதப்பட்டு இயக்கப்பட்டது, அவர் அவெ  (2018) மற்றும் சாம்பி ரெட்டி  (2021) போன்ற திரைப்படங்களை இயக்கியதற்காக மிகவும் பிரபலமானவர்.பிரைம்ஷோ எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நம்பிக்கையூட்டும் இளம் திறமையான தேஜா சஜ்ஜா ஹனுமந்துவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தெலுங்கில் 2022 டிசம்பரில் வெளியிடப்படும்,மற்றும் இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட பதிப்புகளில் டப்பிங் செய்யப்படுகிறது.ஆதிபுருஷை விட ஹனுமானின் டீஸர் மக்களால் அதிக அளவில் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டு வருகிறது.

To be Frank the teaser of #HanuMan is way way better then #Adipurush

ஓம் ராவத் இயக்கத்தில், ராமாயண கதையைத் தழுவி உருவாகிவரும் படம் ‘ஆதிபுருஷ்'. இந்தியாவின் பல மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோனும் நடித்திருக்கிறார்கள்.இப்படம் முழுக்க முழுக்க ராமரை பற்றிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தில் அயோதியின் ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர், ஸ்ரீராமரையும் ஹனுமரையும் மோசமாக சித்தரித்துள்ளதாக கவலை தெரிவித்து, படத்தை தடை செய்யக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மேலும் தெரிந்து கொள்ள ///  ஆதிபுருஷ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்...! மாஸாக உள்ள பிரபாஸ்...!


இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எதுவென்றால் அது, “ஆதிபுருஷ்” தான். பாலிவுட்டின் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் புதுமை தேடி அலைந்ததன் பலனாக இந்த படம் அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் சமீபத்தில் வெளியானது. வெளியான ஐந்து நிமிடங்கைளிலேயே அனைவரது எதிர்பார்ப்புகளையும் மண்ணில் புதைத்து விட்டது என்றே சொல்லலாம்.

ஏன் என்றால், சிறு வயதில் இருந்தே பார்த்து கற்று தெரிந்த ராமாயண கதையை குழந்தைகளைன் கார்ட்டூனை விட மோசமாக எடுத்திருப்பதாக பல வித விமர்சனங்களை ஆதிபுருஷ் சந்தித்தது.
இந்நிலையில், தற்போது, அயோதியின் ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர், இந்த படத்தை ‘தடை’ செய்யக் கோரிக்கை வைத்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ஆதிபுருஷை விட ஹனுமானின் டீஸர் எதிர்பார்ப்புகளை தாண்டி அற்புதமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.என் என்றல் ஹனுமான் திரைப்படமும் ராமரின் கதையா பற்றி தழுவிய கதையாகும். இப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.இப்படம் அடுத்த பான் இந்தியா திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தெரிந்து கொள்ள ///  ' பிளவுபடட்டும் இந்த பூமியும் ஆகாயமும் ' வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர்...!

---ஸ்வாதிஸ்ரீ