எஸ் பி சௌதாரியின் 18 ரீல்ஸ் தயாரிப்பில், கிங்ஸ்லின் இயக்கிய படம் தான் டிரைவர் ஜமுனா. கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வரியா ராஜேஷுடன், இயக்குனர் மற்றும் நடிகரான கவிதா பாரதி, ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஆணாதிக்கம் செய்யும் ஓட்டுநர் சமூகத்தில் ஒரு பெண் காப் டிரைவராக ஜமுனா என்பவர் படும் துயரங்களை இந்த படம் எடுத்துரைக்கிறது. பகிர்ந்து பயணம் செய்யும் முறை தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், ஒரு ரௌடி கும்பலிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் ட்ரைவராக ஐஸ்வரியாவும், உடன் பயணிப்பவராக அபிஷேக்கும் நடித்திருக்கின்றனர்.
வாலாஜாபாதில் இருந்து இ.சி.ஆர் செல்லும் வழியில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் நிரைந்த பயணமாக தான் இந்த படம் உருவாகியுள்ளது. திரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு, கபிலன் வரிகளில் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கோகுல் பினோய் இதற்கு ஒளிப்பதிவு செய்ய, ஆர் ராமர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். மேலும், இந்த படத்திற்கு ஸ்டண்ட் அனல் அரசு செய்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகன் இல்லாதது போல தெரிகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வரியா ராஜேஷ், சமீபத்தில் நடித்து வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் வெப் சீரியஸ் தான் சுழல். தனது தங்கையைத் தொலைத்து தேடும் சகோதரியாக மிகவும் அழகாக நடித்திருந்த நிலையில், இந்த படத்திற்காக ரசிகர்கள் மிக ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.