நடிகர்களில் ஒரு சிலருக்கு மட்டும் தான் ஹேட்டர்களே இல்லை. அந்த ஒரு சிலரில் எப்போதுமே முன்னிலை வகிப்பவர், நமது சியான் விக்ரம் தான், தனது அபரீத நடிப்பும், நடிப்பின் மீதான அதீத ஆர்வத்தையும் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படுத்தி வருகிறார். தனது மாபெரும் படமாக அமைந்த சேது படத்திற்காக அவர் மேனி கெட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது சுமார் 20 வேடங்களில் அவர் நடிப்பில், கோப்ரா படம் வெளியாக தயாராகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இந்த படத்தில், விக்ரம் -உடன், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார், ரோஷன் மேதியூ, ஆனந்த் ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிருனாலினி ரவி, மீனாட்சி கோவிந்த்ராஜ் உட்பட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தின் டீசரும், பாடல்களும் பெரிய அளவில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் ட்ரெயிலர் வெளியாகி, மக்களுக்கு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மனபிரமை:
டிமான்ட்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் என்ற சிறப்பான படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்துவின் மூன்றாவது படம் இது என்பதாலும், நடிப்பின் நாயகன் விக்ரம் 7 வேடங்களில் நடித்திருப்பதாலும், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், ஒரு கணக்கு வாத்தியார் எப்படி உலகளவில் தேடப்பட்டும் க்ரிமினல் ஆகிறார் என்றும், அவருக்கு இருக்கும் ‘Hallucination’ அதாவது, மன பிரமைகளால் நடக்கும் விபரிதங்களும் தான் இந்த படம் கருவாகக் கொண்டுள்ளது என வெளியான ட்ரெயிலரில் தெரிகிறது.
அது மட்டுமின்றி, ட்ரெயிலரில் மட்டும் சுமார் 8 வேடங்களில் தென்படுகிறார். அதிலும், போப் வேடத்தில், அதுவும் கருப்பு போப் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது. இதன் மூலம் கதை குறித்த ஒரு யூகம் வந்துள்ளது.
என்ன தான் கதை?
கதை படி கணக்கு வாத்தியாராக இருக்கும் விக்ரம்-ன் காதல் மனைவி ஸ்ரீநிதி ஷெட்டி. அவரைத் திருமணம் செய்த சில நாட்களிலேயே விபத்தில் இழந்து விடுகிறார் விக்ரம். அவரது மாணவர்களில் ஒருவராக இருக்கும் ரோஷன் மேதியூ, போதை, கடத்தல் போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதைக் கண்டித்ததால் தான் அவரது மனைவி ஸ்ரீநிதி ஷெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் இறந்த சோகத்தில் விக்ரமிற்கு பிரமைகள் தொடங்கியுள்ளன. அதனைப் பயன்படுத்தி, போலீசில் தானாக வந்து சரணடைகிறார். அப்போது வருபவர் தான் இர்ஃபான் பதான். உண்மையில் விக்ரம்-ன் பின்னணியைத் தேடும் ஒரு அதிகாரியாக இருக்கும் இர்ஃபான், விக்ரமிற்கு உதவுகிறாரா இல்லையா என இந்த கதை சொல்கிறது போல தெரிகிறது. மேலும், வில்லன்களின் கைபிடியில் விழாமல் இருக்க தனிமையில் வாடும் இந்த கணக்கு வாத்தியாரின் ஒரு தலை காதலி தான் மிருனாலினியாக இருக்கலாம்.
இன்று மாலை 6 மணிக்கு வெளியான இந்த படத்தின் ட்ரெயிலாரனது வெளியான சிறிது நேரத்திலேயே பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படமானது, தமிழ் மற்றும் தெலுங்கு திரை ரசிகர்களால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.