மார்க் ஆண்டனி படத்திற்கு திரைப்பட தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரின் பேரில், CBI வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 15ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது.
இதன் டப்பிங் - திரையிடலுக்காக மகாராஷ்டிரா தணிக்கை அதிகாரிகள் 6.5 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக விஷால் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்த நிலையில், தணிக்கை குழுவைச் சேர்ந்த மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ் உள்பட 4 பேர் மீது CBI வழக்குப்பதிவு செய்துள்ளது.