கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநில அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக தியேட்டர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆன்லைன் தளங்கள் வளர்ச்சி அதிகமாக காணப்படுகிறது.தியேட்டர்களில் வெளிவரும் படங்களை விட ஓடிடி தளங்களில் அதிக படங்கள் வெளியாகி வருகிறது.இதனையடுத்து அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பிரபல ஓடிடி தளங்களான அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனங்கள் அனுஷ்கா சர்மாவின் கிளின் ஸ்லேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.400 கோடியை முதலீடு செய்துள்ளதாக அதன் இணை நிறுவனர் கர்னேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.