பொழுதுபோக்கு

ஆந்திரா கடற்கரையில் கரை ஒதுங்கிய 25 அடி நீள ராட்சத் நீலத்திமிங்கலம் ...!

Malaimurasu Seithigal TV

வங்கக்கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருவதால் மக்கள் மட்டுமின்றி  கடல்வாழ் உயிரினங்களும் நடுங்கும் நிலை உருவாகியுள்ளது. 

ஆந்திர மாநிலம்  ஸ்ரீகாகுளம் மாவட்டம் சந்தபொம்மாலி மண்டலத்தில் உள்ள பழைய மேகவரம் - டி.மருவாடா கடற்கரைகளுக்கு இடையே நேற்று மாலை ஒரு பெரிய நீல திமிங்கலம் கரை ஒதுங்கியது. 

 சுமார் 25 அடி நீளமும் ஐந்து டன் எடையும் கொண்ட இந்த குறைந்த ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத பகுதியில் வந்து சிக்கி  நீலத்திமிங்கலம் இறந்திருக்கலாம். அதன்பின்னர் கடல் அலைக்கு அடித்து வந்திருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

மிக பெரிய அளவில்   காட்சியளிக்கும் இந்த நீல திமிங்கலத்தை காண அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பார்க்கவும் செல்பி எடுக்கவும் பொது மக்கள் குவிந்துள்ளனர். 

இறந்த இந்த நீலதிமிங்கலத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.