மாவட்டம்

தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் - நெற்பயிர், முட்டைகோஸ் நாசம்...

ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகள் முட்டைகோஸ், நெல் மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி | தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.குருபட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பச்சையப்பன். இவர் அப்பகுதியில் 5 ஏக்கரில் முட்டைகோஸ், ஒரு ஏக்கரில் நெல், ஒன்றரை ஏக்கரில் பீன்ஸ் சாகுபடி செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தல்சூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் பச்சையப்பன் விவசாய நிலத்திற்குள் இறங்கி பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. நேற்று காலை நிலத்திற்கு சென்ற விவசாயி பச்சையப்பன் பயிர்கள் நாசமாகி இருப்பதை கண்டு கண் கலங்கினார்.

தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் உத்தரவின்படி வனத்துறை ஊழியர்கள் நேரில் சென்று சேதங்களை பார்வையிட்டனர். அவர்களிடம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி பச்சையப்பன் கோரிக்கை விடுத்தார்.