மாவட்டம்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில்.... 2025-ம் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம்...!!

Malaimurasu Seithigal TV

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் 2025-ம் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தகவலளித்துள்ளார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.  பின்னர் ராஜ கோபுர திருப்பணிக்கான பாலாலயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இதனையடுத்து யானை குளியல் தொட்டியை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகளை வாம சுந்தரி அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் 206.45 கோடியில்  18 பணிகளும் அறநிலைத்துறை சார்பில் 90.90 லட்சம் மதிப்பில் 18 பணியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.  மொத்தம் மூன்று லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெறும் இந்த பணிகள் மூன்று கட்டமாக நடைபெறுகிறது.

அதில் முதல் கட்ட பணியில் 14 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.  இன்று ராஜ கோபுர திருப்பணிகளுக்கான பாலாலயம் தொடங்கப்பட்டுள்ளது.  16.40 கோடி செலவில் இந்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.  இந்து சமய அறநிலைத்துறையில் இருக்கின்ற 29 யானைகளில் மடாதிபதிகளிடம் உள்ள இரண்டு யானைகள் தவிர்த்து 27 யானைகளுக்கு குளியலறை கட்டப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிலேயே 1000 ஆண்டுகளுக்கு மேலாக மன்னர்களால் உருவாக்கப்பட்ட அந்த பொக்கிஷங்களான கோவில்களை திமுக அரசு பாதுகாத்து வருகிறது.  சரவண பொய்கையில் ரூ.50 லட்சம் மதிப்பில் நந்தவனம் அமைக்கப்பட உள்ளது.  மேலும் கோவில் கடலில் மாற்றுத்திறனாளிகள் புனித நீராட ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.