மாவட்டம்

மணக்கோலத்தில் வந்த மணமக்கள்... சர்ப்ரைஸ் அளித்த கலெக்டர்!!

Malaimurasu Seithigal TV

கள்ளாகுறிச்சி மாவட்டம் ஆட்சியகரத்திற்கு மணக்கோலத்தில் வந்து மனு அளிக்க வந்த தம்பதிக்கு அம்மாவட்ட ஆட்சியர் சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்.  மாற்றுத்திறனாளியான இவர் சுய தொழில் செய்து வருகிறார்.  இந்நிலையில் அன்னை தெரசா நல அறக்கட்டளை மூலம் இவருக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது.  அப்போது மணமகள் சார்பாக 25 ஆயிரம் மதிப்புள்ள சீர் வரிசையுடன் கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகள் சுமதிக்கும், சேகருக்கும் மாப்பிள்ளை வீட்டில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நிலையில் வட பூண்டி பச்சையம்மன் ஆலயத்தில் இருவருக்கும்  உறவினர்கள் அட்சதை தூவ திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த  மணமக்கள் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமாரிடம் ஆசி பெற்றனர்.  மணமக்களை ஆசீர்வதித்த மாவட்ட ஆட்சியர்  மணமக்களுக்கு திருமண பரிசாக உங்களுக்கு வீட்டுமனை பட்டா இருக்கா? குடும்பத்தில் அடிப்படை வசதிகளும் இருக்கா? எனக்கேட்ட நிலையில்  திருமண பரிசாக அளிக்கும் விதமாக அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க 10 நாட்களுக்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக மணமக்களுக்கு உறுதி அளித்தார். 

இதைகேட்ட மாற்றுத்திறனாளி மணமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மன நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.  மேலும் மணக்கோலத்தில் வந்த மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கொடுத்த சர்ப்ரைஸ் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.