மாவட்டம்

உர பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல்....!!!

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல்லில் அமைக்கப்படும் உர பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சி 46வது வார்டுக்கு உட்பட்டது பாரதிபுரம் கள்ளக்காடு.  இந்த பகுதியில் சுமார்  100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.  இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.  மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கும் எடுக்கப்படவில்லை.  

மேலும் தற்போது  அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரிக்கும் உர பூங்கா அமைக்கப்படுகிறது.  இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இது குறித்து மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு நாளாக உர பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று  மேட்டுப்பட்டி சாலையில் திடீர் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.  சுமார் அரை மணி நேரம் நீடித்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் உடன்பாடு ஏற்பட்டு மறியலை கைவிட்டனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.