கடலூர் | சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் போலீசார் பணி ஈடுபட்டிருந்தனர் அப்போது சித்தலப்பாடி டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த வெளிநாட்டு இளைஞர் ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் விற்பனைக்காக 80 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில், அவர் ருவாண்டா நாட்டைச் சேர்ந்த கட்டேரா அமி டி ஜெகோவா(29) என்பதும், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை முதுகலை பட்டப்படிப்பு படித்ததும் தெரிய வந்தது.
தற்போது புதுச்சேரியில் உள்ள குயிலாகுப்பத்தில் தங்கி சிதம்பரத்திற்கு பைக்கில் வந்து கஞ்சா விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது. அதோடு மட்டுமல்லாது இவரது விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கி இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | பட்டாசு ஆலை வெடிவிபத்து...அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!