நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. டானிங்டன் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 28 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை 11 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பறவை காவடி எடுத்து ,அலகு குத்தி மேலும் பெண்கள் பால்குடம் மற்றும் அக்கினி சட்டிகள் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இவ்விழாவில் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: விளையாட்டு போட்டியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்...!!