மாவட்டம்

சித்தர்களின் சிலைகளை உடைத்து மலைப்பகுதிகளில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்...

ராசிபுரம் அருகே கொங்கண சித்தர் கோவிலில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

நாமக்கல் | ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கொங்கண சித்தர் கோவில் உள்ளது. கோயிலில் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு மக்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொங்கண சித்தர் கோவில் நிர்வாகிகள் கோவிலை திறந்து பார்த்த போது கோவிலின் உள்ள சித்தர்கள் சிலை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர்கோவில் கோபுரங்கள் பக்கவாட்டின் சுவற்றில் உள்ள போகர் சிலை, பாம்பாட்டி சித்தர் சிலை, அகத்தியர் சிலை உள்ளிட்ட 3 சித்தர்களின் சிலைகளை கோபுர பக்கவாட்டின் சுவர்களில் இருந்து எடுத்து சிலையை சேதப்படுத்தி அருகாமையில் உள்ள சித்தர மலைப்பகுதியில் மர்ம நபர்கள் வீசி சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.