திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் சாலை பிரிவு அருகே வசித்து வருபவர் செல்வம். இவருக்கு அதே பகுதியில் செல்வம் டெக்ஸ்டைல் என்ற பெயரில் நூற்பாலை இயங்கி வருகிறது. இதில் வட மாநில மற்றும் உள்ளூரை சேர்ந்த தொழிலாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.
பணியில் இருந்த தொழிலாளர்கள் பலரும் அங்கிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடம் விரைந்து சென்ற நிலையை அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் மூலமாக தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், நூல் மூட்டைகள், கட்டிடங்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இந்த விபத்திற்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக,மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்கும் வகையில் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது. பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் போக்குவரத்தும் கடுமையாக பாதிப்படைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: தொடர் திருட்டு சம்பவம்... கைது செய்யப்பட்ட ரேகா...!!!