பட்டுக்கோட்டை, தஞ்சை | மாண்டஸ் புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மழை பெய்து வருவதால் தஞ்சை வந்த 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் பட்டுக்கோட்டை விரைகின்றனர். ஸ்டெரச்சர், மரம் அறுக்கும் இயந்திரம், படகு, உள்ளிட்ட ஆயத்த பொருட்களுடன் செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டு உள்ளது.
மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதால், தஞ்சை மாவட்டம் கடலோர பகுதியில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது கடலோர பகுதியான பட்டுக்கோட்டையில் மழை பெய்து வருகிறது. கடந்த கஜா புயலின் போது இந்த பகுதியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை வந்த 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் பட்டுக்கோட்டை விரைகின்றனர். ஸ்டெரச்சர், மரம் அறுக்கும் இயந்திரம், மிதவை, படகு உள்ளிட்ட ஆயத்த பொருட்களுடன் செல்கின்றனர்.
மேலும் படிக்க | புயலாகவே கரையை கடக்குமா மாண்டஸ்? இந்திய வானிலை சொல்லும் தகவல்!