மாவட்டம்

சட்டவிரோதமான மது விற்பனையும் கண்டுகொள்ளாத காவல்துறையும்....

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடந்து வருகிறது.

மிலாடி நபியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யப்படுகிறது. சின்னப்ப நாயக்கன் பாளையம், ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு மற்றும் கே.ஓ.என். தியேட்டர்  உள்ளிட்ட பகுதிகளில் மதுபானங்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறறது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள டாஸ்மார்க் கடை பாரில் வைத்தே சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.  புதருக்குள் மறைத்து வைத்துள்ள சாக்கில் இருந்து மது பாட்டில்கள் எடுத்து வரப்பட்டு அமோகமாக விற்கப்படுகிறது.
 
இதேபோல்  கோவை மாவட்டம்  செலம்பனூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை பாரிலும் மது விற்பனையால் டாஸ்மாக் கடை வழக்கம் போல் செயல்படுவது போல் உள்ளது. சட்டவிரோத மதுவிற்பனையை  காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.