மாவட்டம்

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில் தெப்பத்திருவிழா...

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பேட்டராய சுவாமி கோயில் தெப்ப உற்சவ திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

Malaimurasu Seithigal TV

கிருஷ்ணகிரி | தேன்கனிக்கோட்டையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சௌந்தர்யவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று தெப்ப உற்சவ திருவிழா நடைபெற்றது.

முன்னதாக கோயிலில் இருந்து தேன்கனிக்கோட்டையில் உள்ள பெரிய ஏரிக்கு ஸ்ரீ சௌந்தர்யவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீ பேட்டராய சுவாமி ஆகிய தெய்வங்களை கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமிகளை வைத்து ஏரியில் தெப்பம் உற்சவ விழா நடத்தப்பட்டது.

தெப்பமானது பெரிய ஏரியில் 4 முறை சுற்றி வந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீ சௌந்தர்யவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீ பேட்டராயசுவாமி ஆகியோர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த தெப்பதிருவிழாவில் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.