தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பகல் முழுவதும் வாட்டி வதைக்கும் வெப்பத்தின் தாக்கம் தணிந்து இரவு நேரங்களில் இதமான சூழல் நிலை வருகிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி உள்ளாகினர்.
இருந்த போதும் வீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ வீராணம், ஏந்தலூர் கிராமங்களில் திடீரென சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கன மழையால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 6000-க்கும் மேற்பட்ட அறுவடைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள வாழைகள் முழுவதும் சாய்ந்து சேதமாகியது.
மேலும் படிக்க | கனமழையால் அடியோடு சாய்ந்த வாழை மரங்கள்...
இதன் காரணமாக, அந்த வாழைக் காய்களை பழுக்க வைக்க முடியாமலும், காய்கறிக்கு கூட பயன்படுத்த முடியாத சூழலும் நிலவி வருவதால் அதை மண்ணில் போட்டு அளிக்கும் நிலைக்குத் தரப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இயற்கை பேரிடரால் பாதிப்படைந்த வாழைமரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் ஏராளமான விவசாயிகள் சேதமடைந்த வாழைத் தார்களுடன் உரிய இழப்பீடு தொகை வழங்க கோரி புகார் கொடுக்க வந்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் ஆட்சியர் அலுவலக கூட்டரங் இருந்து வெளியே சென்றனர்.
மேலும் படிக்க | மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி சடலமாக மீட்பு...