திருச்சி | சிறுகனூர் அடுத்து எம்.ஆர்.பாளையம் காப்புக் காட்டில் ரூ.2 கோடி செலவில் 19.80 ஹெக்டேர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் 2019 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை சார்பில் தொடங்கபட்டது. சரியான பராமரிப்பு இல்லாதா யானைகளை கொண்டு வந்து வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது
முதலில் மதுரையில் இருந்து மலாச்சி என்ற யானை எம். ஆர். பாளையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பிறகு ஒவ்வொரு யானையாக கொண்டுவரப்பட்டு தற்போது மல்லாச்சி 38, இந்து 36, ஜெயந்தி 25, சந்தியா 48, கோமதி 69, இந்திரா 61, சுமதி 56, கீரதி 63/ ரூபாலி 22 என 9 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | வெறிச்சோடி காணப்படும் போடி மெட்டு சாலை...
யானைகளுக்கு நீர் என்றால் அலாதி பிரியம். நீரோடைகளிலும் சரி, தேங்கிய குட்டைகளிலும் சரி யானைகளை அங்கே அழைத்துச்சென்று விட்டால் போடும் கும்மாளத்திற்கும் குதூகலத்திற்கும் அளவே இல்லை.
தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதால் எம்.ஆர்.பாளையம் காப்புகாட்டில் 9 யானைகளும் காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களிலிலும் யானைகளுக்கு என பிரேத்தியமாக நீச்சல் தொட்டிகளுக்கு யானைகள் வருவதற்கான சாய்தளமும் அமைக்கபட்டுள்ள மூன்று தொட்டிகளிலும் 9 யானைகளும் குதுகலத்துடன் உற்சாக குளியல் போட்டு நீந்தி விளையாடி மகிழ்கின்றன.
மேலும் சவர் குளியலிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகிறது. அதிரும் ரூபாலி, ஜெயந்தி இரண்டு யானைகளும் படு சுட்டியாக நீரில் விளையாடி மகிந்து வருகின்றன. அதோடு மட்டுல்லாமல் யானைகளின் கால்களை சுத்த செய்வதற்க்கும் சிறிய தொட்டி அமைக்கபட்டு அதில் யானைகள் குளித்தபின்பு 10 நிமிடம் நின்று விட்டு தான் செல்கிறது.
மேலும் படிக்க | மீட்கப்பட்ட குட்டி யானை... தாய் யானையுடன் சேர்ப்பு!!
மேலும் வெயிலிருந்து பாதுகாப்பதற்கு மண் குளியலில் உற்சாகமாக மண்ணை அள்ளி முதுகில் போட்டு விளையாடி வருகிறது. மேலும் யானை பாகன் சொல்லிற்க்கு ஏற்ப மவுத்தார்கன் வாசித்து விளையாடி மகிழ்கின்றன.
வெயில் அதிகமாக இருப்பதால் யானைகளுக்கு தர்பூசனி, வாழைபழம், முலாம்பழம், முட்டைகோஷ், பசுந்தால், என பல்வேறு வகையான பழங்கள் கொடுப்பதால் உற்சாகமாக குளித்தபின்பு சாப்பிட்டு ஜாலியாக விளையாடி வருகிறது.
காப்பு காட்டில் ஒன்பது யானைகளையும் பராமரிப்பதற்காக வாகனங்கள் உள்ளனர் மேலும் இவை அனைத்துமே திருச்சி மண்டல வனத்துறை அலுவலர் சதீஷ் மேற்பார்வையின் கீழ் திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலக கிரேன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சாலையை மறித்து நின்ற ஒற்றை காட்டு யானை...