மாவட்டம்

12 லட்சம் குளோரின் மாத்திரைகளை வழங்கிய குடிநீர் வாரியம்...

பருவ மழை எதிரொலி - சென்னையில் 12 லட்சம் குளோரின் மாத்திரைகளை வழங்கும் பணியை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது.

Malaimurasu Seithigal TV

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோயினை தவிர்க்க 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும் பணிகள் மற்றும் குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொற்றுநோய் பரவாமல் இருக்க குடிநீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு 15 லிட்டர் குடிநீரில் ஒரு குளோரின் மாத்திரையை கலந்து இரண்டு மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

அதில், “பருவமழையின் காரணமாக சென்னையில் தினதோறும் 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அளவிற்கு அதிகமான குடிநீரை பொதுமக்கள் சேமித்து வைக்க வேண்டாம்” எனக் கூறப்பட்டது.