மாவட்டம்

ஆன்லைன் ரம்மியால்..! கல்லூாி மாணவா் உயிரிழப்பு...!!

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த எம்.பி.ஏ படித்து வந்த மாணவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புன்னை நகரை சேர்ந்தவர் சானிஸ். 26 வயதான இவர் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வந்தார். இவரது பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டதால் இவருடைய உறவினர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீப காலமாக இவர் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக தெரிகிறது. இவர் ரம்மி விளையாட்டில் தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார். தொடர்ந்து 3 லட்ச ரூபாய் இழந்ததால் மனம் உடைந்த சன்னிஸ் நேற்று மாலை ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகாமையில் உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தடை சட்டத்தை அமல்படுத்திய பிறகும் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.