மாவட்டம்

கூப்பிடு பிள்ளையார் திருக்கோயில் கும்பாபிஷேகம் ...

பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

Malaimurasu Seithigal TV

திருப்பூர் | பல்லடம் காரணம்பேட்டை  பகுதியில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கூப்பிட்டு பிள்ளையார் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவில் யாகங்கள் வளர்த்து மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். பின்னர் பல்வேறு புனித தளங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்தில் தெளிக்கப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழ் வழியில் வேள்விகள் நடைப்பெற்றன. இந்த குடமுழுக்கு விழாவில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னாதானம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் குடமுழுக்கு விழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மரங்கன்றுகள் பிரசாத பைகள் வழங்கப்பட்டன.