க்ரைம்

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தல்.... கைது செய்யப்பட்ட பெண்கள்!!!

Malaimurasu Seithigal TV

ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்திய வழக்கில்,  இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேருக்கு, தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடத்தல் வழக்கு:

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிகாலை வந்த  ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில்  சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை செய்ததில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயா, காளியம்மாள், சிவகுமார் ஆகியோரை வைத்திருந்த உடமைகளில், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 101 கிலோ எடை கொண்ட கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து,  மூவரும் கைது செய்யப்பட்டனர்.

தீர்ப்பு:

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் மூவருக்கும் தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.