க்ரைம்

குற்றவாளிகளின் பற்கள் புடுங்கப்பட்ட விவகாரம்...!!

Malaimurasu Seithigal TV

திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில்  சிறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் விசாரணை என்ற பெயரில் ASP பல்விந்தர் சிங்கால் பிடிங்கப்படுவதாக புகார் எழுந்தது.  இந்த விவகாரம் தொடர்பாக சேரன் மகாதேவி துணை ஆட்சியர் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. 

இந்த புகாரையடுத்து, குற்றவாளிகளின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. 

புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி ஆறு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.