சென்னை, கரூர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தொழிலதிபர் அபிராமி ராமநாதன் தொடர்புடைய மயிலாப்பூர், போயஸ் கார்டன், மந்தைவெளியில் உள்ளிட்ட இடங்களில் சோதனை 3வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதேபோல் அப்பாசாமி கட்டுமான நிறுவன உரிமையாளர் குடும்பத்திற்கு சொந்தமான தியாகராய நகரில் உள்ள 2 தங்கும் விடுதிகள் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் சோதனை தொடர்கிறது. திருவான்மியூர் L.B. சாலையில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகம் உள்பட 4 அலுவலகங்களிலும் சோதனை தொடர்கிறது.
இதையும் படிக்க : இரண்டு நாள் சோதனைக்கு பின் அபிராமி ராமநாதனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை!
கரூரில் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகம் என 3 இடங்களில் மூன்றாம் நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மறைந்த திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீட்டிலும், காந்திபுரத்தில் உள்ள சுரேஷ் என்பவரது அலுவலகம், ஆகிய இடங்களில் 3 வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.