க்ரைம்

பேருந்தின் மேற்கூரை மற்றும் படிகட்டில் தொங்கியபடி பயணித்தால் கடும் நடவடிக்கை!!

Malaimurasu Seithigal TV

மாணவர்கள் பேருந்தின் கூரையின் மேல் ஏறி பயணம் செய்தால் கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும் காவல் கிழக்கு மண்டல துணை ஆணையர் சமேசிங் மீனா தெரிவிதுள்ளார்.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட சென்னை போக்குவரத்துக் காவல் கிழக்கு மண்டல துணை ஆணையர் சமேசிங் மீனா, மேடையில் பேசிய போது, "மாணவர்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கல்லூரி வாழ்வை கொண்டாடும் அதே நேரத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், "இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. சென்னையில் அதிக விபத்து அதி வேகத்தில் செல்வதால் நடைபெறுகிறது. ஹெல்மெட் கட்டாயம் அணியுங்கள். பெற்றோரை நினைத்து பார்த்து கவனமாக பைக் ஓட்டுங்கள். உங்களுக்கு காயம் ஏற்பட்டால் பெரிதும் பாதிக்கப்படுவது பெற்றோர் தான். பைக் ஓட்டும் போது சிறிய தவறும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். இளம் வயதில்  உங்களுக்கு அது எதுவும் பெரிதாக தெரியாது. ஆனால் உங்களுக்காவே பல கனவுகளுடன் உள்ள உங்கள் பெற்றோரை பெரிதும் பாதிக்கும்" என பேசியுள்ளார்.

மேலும், "சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது பேருந்தின் கூரையின் மேல் ஏறி போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நந்தனம் கலை அறிவியல் கல்லூரி, பச்சையப்பாஸ் கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடும் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.