பாலியல் தொழில் குற்றமில்லை என மும்பை நீதி மன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முல்லுண்டு பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 3 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களைக் காப்பகக் காவலில் அடைக்க மஜ்காவ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் ஏற்கனவே 2 பெண்கள் காப்பகத்தில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் மீதமுள்ள ஒருவர் மட்டும் ஓராண்டுக்கும் மேலாக காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இதை எதிர்த்து அப்பெண் மும்பை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் விசாரணையில், 34 வயது கொண்ட அப்பெண் வயது வந்தவர் என்பதால் அப்பெண்ணை சட்ட விரோதமாக காவலில் அடைத்து வைப்பதை கண்டித்த நீதிபதிகள். இந்திய அரசியலைமப்பு சட்டம் பிரிவு 19ன் படி ஒருவர் இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக வாழும் உரிமை பெற்றவராவார் என தெரிவித்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமில்லை என்று அதிரடியாக தெரிவித்த நீதிபதிகள் பொது இடங்களில் மக்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது மட்டுமே குற்றமாகக் கருதப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் 2 குழந்தைகளுக்கு தாயான அப்பெண்ணை காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என அறிவித்தனர்.
இதையும் படிக்க:”தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்” - தலைவா் எா்ணாவூா் நாராயணன் உறுதி!