சென்னை பெரியமேட்டில் உள்ள சுப்பையா தெருவில் வசித்து வருபவர் முன்னாள் கவுன்சிலரும் திமுக வட்ட செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி. இவர் நேற்று மாலை ஏழு மணி அளவில் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் அவர் வசிக்கும் அதே தெருவின் துவக்கத்தில் அமைந்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அலுவலகத்தில் கீழே இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை கொண்டு வந்து தாங்கள் வந்து கொண்டிருந்த ஆட்டோ வேன் மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அங்கே இரு தரப்புக்கும் வாக்குவாதம் நடைபெற்று அது முடிவடைந்து அதற்கு பிறகாக இரவு பத்து மணிக்கு மேலாக அதே பிஎஃபை இஸ்லாமிய இயக்கத்திற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் உள்ள பெண்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு ஆதரவாக அப்பகுதி வாசிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நபர்களுக்கும் இடையே கடும் தாக்குதல் ஏற்பட்டது இந்த தாக்குதலில் இருதரப்பிலும் பலர் காயம் அடைந்த நிலையில் காவல்துறையினரும் தாக்கப்பட்டனர்.
மேலும் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரிடமும் புகார்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவிக்க இருதரப்பினரும் கலைந்து சென்றனர்