நீலகிரியில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்த நபரை போலீசார் தற்காப்புக்காக சுட்டுப் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாம்பார் மணி என்பவர் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களைத் திருடி வந்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக அவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சாம்பார் மணியை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பந்தலூர் அருகே குந்தலாடியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபானங்களை திருடிக் கொண்டிருந்தபோது சாம்பார் மணியை நீலகிரி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இதையும் படிக்க : அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு...வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை!
அப்போது ஒரு காவலரை அரிவாளால் சாம்பார்மணி தாக்க முயன்றதாக கூறப்படும் நிலையில், தற்காப்புக்காக அவரது காலில் சுட்டு சாம்பார்மணியை போலீசார் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து சாம்பார்மணியும், கையில் காயம் ஏற்பட்ட காவலர் ஒருவரும் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.