திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா வேலஞ்சேரி ஊராட்சியில் கிராமத்தில் வசிப்பவர் ஜெகநாதன். இவர் அப்பகுதியின் முக்கிய தி.மு.க பிரமுகர் ஆவார். இவரது மகன் விஷ்ணு வயது (24). இவரது பிறந்த நாளை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், தி.மு.க கட்சி வர்ணத்தில் மாலை அணிந்து கொண்டு பிறந்தநாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில், பட்டகத்தியால் கேக்கை வெட்டியா வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், இளைஞர் விஷ்ணுவை பிடிக்க திருத்தணி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில், இளைஞர் விஷ்ணு, அவரது சொந்த ஊரில், உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு சென்று தேடியபோது, விஷ்ணு காவலர்களிடம் மாட்டிக்கொண்டார்.
பின்னர், பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞர், விஷ்ணுவை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க: "மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுகவில் சேரலாம்" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை!