திருவள்ளூர் | பெரியபாளையத்தை அடுத்த கன்னிகைப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் திராவிடபாலு. இவருக்கு செல்வி என்ற மனைவியும், முருகன் என்ற மகனும் உள்ளனர். தி.மு.க. ஒன்றிய செயலாளராகவும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்து வந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்தவர்களால் பெட்ரோல் குண்டு வீசிக் கொலை செய்யப்பட்டார்.
திராவிடபாலு இறந்ததையைடுத்து அவரது தம்பி சத்தியவேலு என்பவர் எல்லாபுரம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சத்யவேலுவின் 22 வயது மகனான விஷாலுக்கும், பெரியப்பா மகன் முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நிலம் பாகப்பிரிவினை மற்றும் பதவி கைமாறியதும் என வெவ்வேறு காரணங்களால் பல வருடங்களாக அவ்வப்போது அடித்துக் கொண்ட குடும்பத்துக்குள் மூண்ட பகை தணியாமலேயே இருந்து வந்தது. இந்நிலையில் புத்தாண்டு நாளன்றுகூட நிலப்பிரச்சினையைக் கையில் எடுத்த விஷால் பெரியம்மாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து திராவிடபாலுவின் மனைவி செல்வி, மகன் முருகன் மருமகள் ரம்யா மற்றும் முருகனின் மகன் கருணாநிதி ஆகிய 4 பேரும் விஷாலை துரத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஷால் வீட்டின் அருகே கிடந்த இரும்பிக்கம்பியை எடுத்து கண்ணை மூடிக் கொண்டு தாக்கத் தொடங்கினார்.
இதில் பெரியம்மா, அண்ணன், அண்ணி மற்றும் அண்ணன் மகன் என நால்வருக்கும் பலத்த அடி விழுந்தது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தலையிட்டு தகராறை தீர்த்து வைத்தனர்.
உடனே காயமடைந்த நால்வரையும், மஞ்சங்காரணையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் முருகனின் மனைவி ரம்யா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணியை அடித்துக் கொலை செய்து விட்டு தப்பியோடிய விஷாலை கைது செய்தனர் போலீசார்.
பாகப்பிரிவினை தொடர்பாக அண்ணியை மைத்துனனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க | தனியார் பேருந்தில் மோதி இளம்பெண் உயிரிழப்பு...