க்ரைம்

வீட்டின் மாடியில் பதுங்கியிருந்த நைட்டி திருடன்!! மொபைல் மூலம் கண்டறிந்த பெண்...சுற்றி வளைத்த போலீசார்

வீட்டின் மாடியில் பதுங்கியிருந்த நைட்டி திருடனை பெண் ஒருவர் மொபைல் மூலம் கண்டறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், கீழூர் அருகே வசித்து வருபவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாத்தியூ-  சூசாம்மா தம்பதி. இவர்களுக்கு சோனா என்ற மகள் உள்ளார். அவர் திருமணம் ஆகி பெரம்பலூரில் கணவருடன் வசித்துவருகிறார். என்னதான் கணவருடன் வசித்து வந்தாலும் வீட்டில் வயதான  தனது தாய் தந்தையர்  இருப்பதால் சோனா தனது வீட்டை சுற்றிலும் கேமராக்களை வைத்து இடையிடையே மொபைல் போன் மூலம் வீட்டைகண்காணித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் சிசிடிவி காட்சிகளை கண்காணித்து கொண்டிருந்தபோது, வீட்டின் மாடி பகுதியில் நைட்டி அணிந்துகொண்டு ஒரு ஆண் நிற்பது தெரியவந்தது.  இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சோனா அவனை திருடன் என்று நினைத்து  உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டை சுற்றிலும் போலீஸ் படிஅயை நிறுத்தி மாடியில் பதுங்கியிருந்த திருடனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், நைட்டி அணிந்திருந்த திருடன் பெயர் ராபின்சன் என்பதும், இவன் கோட்டயம் கீழூர் பகுதியைச் சேர்ந்தவன் என்பதும், தற்போது வாடகைக்கு ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே வசித்து வருவதும் தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து தகவல் தெரிவித்த போலீசார், இவன் பிரபல கிரிமினல் என்றும், பகல் நேரங்களில் முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகளை குறிவைத்து  இதுபோல வீடுகளின் மாடியில் பதுங்கியிருந்து நள்ளிரவு வீட்டில்  முதியவர்கள் உறங்கும் போது அவர்களை தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான் என்று தெரிவித்துள்ளான்.