க்ரைம்

பேஸ்புக், வாட்ஸ்ஆப்பே கதியாய் கிடந்த தங்கை...  வெட்டி கொலை செய்த அண்ணன்... தூத்துக்குடி அருகே பரபரப்பு...

தூத்துக்குடி அருகே போனிலேயே அதிக நேரத்தை செலவிட்ட தங்கையை வெட்டிக் கொன்றிருக்கிறார் அண்ணன்.

Malaimurasu Seithigal TV
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டு அருகே உள்ள வசவபுரத்தை சேர்ந்த விவசாயியான சுடலைக்கு இரண்டு பிள்ளைகள். 20 வயதில் மாலை ராஜா என்ற மகனும், 17 வயதில் கவிதா என்ற மகளும் உள்ளனர்.
கவிதா 12ஆம் வகுப்பு படித்துள்ளார். கவிதா எப்போது பார்த்தாலும் போனும் கையுமாகமேவ இருந்திருக்கிறார். காலம் நேரம் பார்க்காமல் எந்த நேரமும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் என்று தனது நேரத்தை செலவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது அண்ணன் மாலை ராஜா அடிக்கடி கண்டித்து வந்திருக்கிறார்.
அண்ணனின் கண்டிப்புகளை காதிலேயே வாங்கிக் கொள்ளாத கவிதா தொடர்ந்து விடியவிடிய வீடியோகேம், பேஸ்புக் என இருந்துவந்த நிலையில், நேற்று மாலை கவிதா செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த மலைராஜா மீண்டும் தனது தங்கையை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மலைராஜா ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தங்கையை வெட்டியுள்ளார். 10க்கும் மேற்பட்ட இடத்தில் அரிவாள் வெட்டுப்பட்ட கவிதா அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
தூத்துக்குடி அருகே முறப்பநாட்டில் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்ட தங்கையை அண்ணன் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம், பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை. விவசாயியான இவருக்கு  மாலைராஜா (20) என்ற மகனும் கவிதா (17) என்ற மகளும் உள்ளனர். கவிதா பிளஸ் டூ படித்துள்ளார். இந்தநிலையில் கவிதா தனது செல்போன் மூலம் விடிய விடிய கேம் விளையாடுவது, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை அவரது அண்ணன் மாலைராஜா கண்டித்துள்ளார். பல தடவை கண்டித்தும் கவிதா செல்போனில் விளையாடுவதை நிறுத்தவில்லையாம்.  இந்நிலையில் இன்று மாலை கவிதா செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த அவரது அண்ணன் மாலைராஜா சத்தம் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மாலை ராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக தங்கை கவிதாவை வெட்டியுள்ளார். இதில் உடலில் 10க்கும் மேற்பட்ட இடத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கவிதா துடி, துடித்து பரிதாபமாக இறந்தார். தங்கை இறந்ததைக் கண்டதும் மலைராஜா தப்பி ஓடிவிட்டார். 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும்  முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே தப்பியோடிய மாலை ராஜாவை வல்லநாடு காட்டுப்பகுதியில் வைத்து போலீசார் கைது சென்தனர். இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.