ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
சென்னை ஈகாட்டூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி தேவி, கொடைக்கானலில் உள்ள பள்ளியில் படித்தபோது, தோழி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். தோழியின் திருமணத்துக்காக சென்ற இடத்தில் ரவீந்திரநாத்தும், அவரது மனைவி ஆனந்தியும் அறிமுகமாகியுள்ளனர்.
இதையடுத்து ஓ.பி.ஆரின் மனைவியுடன் நெருங்கிய தோழியான காயத்ரி அடிக்கடி சென்று வருவதுண்டு. இவ்வாறு நாட்கள் சென்று கொண்டிருக்க ரவீந்திரநாத், தனது மனைவியின் தோழி ஒருவருடன் திருமணம் கடந்த உறவு வைத்திருந்ததை காயத்ரி அறிந்து கொண்டார்.
இருந்தாலும் இதைப் பற்றி கேட்டுக் கொள்ளவில்லை என அறியப்படுகிறது. இந்நிலையில், ரவீந்திரநாத்திடம் இருந்து, காயத்ரிக்கு போன் கால் வந்துள்ளது. இதையடுத்து சில நாட்கள் கழித்து ரவீந்திரநாத் போன் செய்து சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், இரவு நேரங்களில் மதுபோதையில் ரவீந்திரநாத், தனக்கு வாட்ஸ் அப்பில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவதாகவும், தன்னை வீடியோ காலில் பேசும்படி ஓபிஆர் வற்புறுத்துவதாகவும், குற்றம் சாட்டியுள்ளார் காயத்ரி.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் புகார் அளித்தும் பலன் இல்லை என்கிறார் காயத்ரி. இதுகுறித்து ஏற்கெனவே ஜூன் மாதம் புகார் அளித்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாட இருப்பதாக பஞ்சாயத்தை கூட்டியுள்ளார் காயத்ரி.
ஏற்கனவே தகுதி நீக்க வழக்கை எதிர்கொண்டுள்ள ஓ.பி.ரவீந்திரநாத், தற்போது பாலியல் புகாரில் சிக்கி இருப்பது அவரது அரசியல் வாழ்க்கைக்கு கேள்விகுறியை உண்டாக்கி உள்ளது.
இதையும் படிக்க || "தமிழ்நாட்டில் கள்ளுக்கடை புறக்கணிப்படுகிறது" அண்ணாமலை!!