கடலூர் அருகே, நிச்சயித்த பெண்ணை கரம் பிடிப்பதற்கு, கூடுதலாக வரதட்சணை கேட்ட மணமகனின் பேரில், மணமகள் வீட்டார் புகார் அளித்ததன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பிரகாஷ் (38). இவர் பண்ருட்டியில், ஒரு தனியார் பேப்பர் ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் சேமக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன், அங்குசெட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அதிகப்படியாக, வரதட்சணை நகை செய்ய வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
அதன் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபர் பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிக்க: "பின்வாசல் வழியாக செல்வதும், ரயிலில் ஏறி வருவதும் முதல்வருக்கு புதிது அல்ல", அண்ணாமலை பரபரப்பு பேச்சு!