க்ரைம்

அட்டவணை பிரிவினரை அவமதித்த வழக்கில், திமுக நிர்வாகிக்கு போலீசார் வலைவீச்சு !!

Malaimurasu Seithigal TV

அாியலூா் அருகே அட்டவணை பிாிவைச் சோ்ந்த நபரை அவமதித்த ஒருவரை போலீசாா் கைது செய்து, மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சி  கிராமத்தை  சேர்ந்தவர் அன்பரசன். இவரது மகளுக்கு கடந்த 8 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இதற்கு சீர் வரிசை எடுத்து வரும் போது மாற்று சமூகத்தினர் தெருவில் வெடி வெடித்துள்ளனர்.

அப்பொழுது முன்னால் ஊராட்சிமன்ற தலைவரும், திமுக ஊராட்சி செயலாளருமான கண்ணன் போலீஸ்சுக்கு போன் செய்து கூட்டத்தை கலைத்துள்ளார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காவல் நிலையம் முன்பு, திருநாவுகரசு, மற்றொரு சமூகத்தினரின் மக்கள் முன்பு, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருநாவுக்கரசின் அண்ணன் அன்பரசன் பாஜக தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இதனால் காவல் நிலையம் முன்பு காலனி தெருவை சேர்ந்தவரை, காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது தீண்டாமை அல்லவா என பதிவிட்டு ரிஜிஸ்டர் தபால் மூலம் குடியரசு தலைவர், ஆளுநர், மாவட்ட காவல்துறை உள்ளிட்ட 14 அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த கண்ணன், ராஜேஷ், ராமச்சந்திரன், ரமேஷ் அருண்வேலுச்சாமி  உள்ளிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சட்டத்தின் கீழ் ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் என்பவரை கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். 

மேலும் தலைமறைவாக உள்ள திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்ளிட்ட ஐந்து பேரை இரண்டு தனிப்படை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.