சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில், கள்ளிக்காடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடை அருகிலுள்ள சந்தோஷ் கதிர்வேல் என்பவரது கடையின் முன்பாக சுப்பிரமணி சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த சந்தோஷ்கதிர்வேல் தாயார் சுகுணா தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சந்தோஷ்கதிர்வேல், தனது தாயிடம் தகராறில் ஈடுபட்ட சுப்பிரமணியை பலமாக தாக்கியுள்ளார். தாயார் சுகுணாவும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த சுப்பிரமணி ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியான சந்தோஷ்கதிர்வேல், அவரது தாய் சுகுணா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.