க்ரைம்

"போதை பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் சஸ்பெண்ட்" டிஜிபி தகவல்!

Malaimurasu Seithigal TV

போதை பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுயள்ளதாகவும் மேலும் இதில் 10 பேர் சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும்  தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள போலீஸாரின் ஆயுதப்படை மைதானத்தில் இன்று போதை ஒழிப்பு குறித்த தோல்பாவை கூத்து மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

பின்னர் நெல்லை கன்னியாகுமரி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, திருடுபோய் மீட்கப்பட்ட 300 மொபைல் போன்களை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழகத்தில் 281 எல்லை காவல் நிலையங்களில் போதை பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை போதைப்பொருள் கடத்திய 2861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 54 டன் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 28 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், போதை பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 18 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு காவல் துறை நடவடிக்கை தீவிரமாக எடுத்துள்ளது என்று கூறினார்.