க்ரைம்

ரூ.225 கோடி மோசடி செய்த தனியார் ஏற்றுமதி நிறுவனம்...அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Tamil Selvi Selvakumar

சென்னையில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான 15  இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னையைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம் 225 கோடி ரூபாய் வங்கியில் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனத்திற்கு தொடர்புள்ள மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், அமைந்தகரை, கோடம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

அதேபோல் பெருங்குடி ஜானகிராமன் நகரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ள ஜேம்ஸ் வால்டர் நிறுவனத்திற்கு சொந்தமான ஆரோன் கன்சல்டிங் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த புதுக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் ஓஷணிக் எடிபெல் இண்டர்நேஷனல் லிமிட்டட் என்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் உள்ள இறால் குஞ்சு பொரிப்பகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.